/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இரு விபத்துக்கு காரணமான அதிவேக கார்; மூவர் காயம்
/
இரு விபத்துக்கு காரணமான அதிவேக கார்; மூவர் காயம்
ADDED : மார் 05, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே அத்தாணி சாலையை சேர்ந்தவர் முருகேசன், 59; நேற்று முன்தினம் இரவு, 8:45 மணிக்கு பேசன் புரோ பைக்கில், புதுவள்ளியாம்பாளையம் என்ற இடத்தில் சென்றார். எதிரே அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில், முருகேசன் துாக்கி வீசப்பட்டார்.
காரின் முன்பக்க மட்கார்டு பறந்து சென்றதில், முருகேசன் பைக் பின்னால் வந்த ஸ்பிளெண்டர் பைக்கில் வந்த பாலு, 52, சரண், 17, மீது விழுந்ததில் இருவரும் காயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திய காரை, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.