/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் மண்ணீரலில் உருவான கட்டி அகற்றம்
/
கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் மண்ணீரலில் உருவான கட்டி அகற்றம்
கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் மண்ணீரலில் உருவான கட்டி அகற்றம்
கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் மண்ணீரலில் உருவான கட்டி அகற்றம்
ADDED : ஆக 12, 2025 01:24 AM
ஈரோடு, திருச்செங்கோட்டை சேர்ந்தவர் நல்லம்மாள், 60; அதீத வயிற்று வலியால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஈரோடு கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் சேர்ந்தார். பரிசோதனையில் மண்ணீரலில் வீக்கம் ஏற்ப்பட்டு வயிற்றில் பெரிய கட்டி உடைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் இருந்தது. பொது அறுவை சிகிச்சை மருத்துவர் மோகன் தலைமையிலான குழு, அறுவை சிகிச்சை செய்து, 12 லிட்டர் அளவு கால்சியம் படிந்த திரவக்கட்டியை அகற்றினர். இக்கட்டி மண்ணீரலில் இருந்தே உருவாகி இருந்தது. ஓரிரு நாளில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார்.பொதுவாக இம்மாதிரி உள் உறுப்பில் ஏற்படும் கட்டியை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் போது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே அனைத்து மருத்துவ குழுவினர் அடங்கிய, இதுபோன்ற சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று, மருத்துவமனை செயல் இயக்குனர் அருண் என்.பழனிச்சாமி தெரிவித்தார்.