/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : செப் 23, 2024 04:09 AM
ஈரோடு: கோபி ஸ்ரீவெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லுாரியில், 12வது பட்டமளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக விஞ்ஞானி மற்றும் எஸ்.எப்., மெட்டீரியல் மெட்டலர்ஜி குழு, விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர், இளமுருகு மற்றும் சென்னை வி.டி.எஸ்., என்டர்பிரைசஸ் லிமிடேட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சத்தியநாராயணன் பங்கேற்றனர்.
எம்.எல்.ஏ.,வும் கல்லுாரி செயலாளருமான கருப்பணன், தலைவர் வெங்கடாச்சலம், துணை செயலாளர் கெட்டிமுத்து, அறங்காவலர்கள் கவியரசு, தலைமை நிர்வாக அதிகாரி கெளதம், துணை முதல்வர், புலமுதல்வர், துறை தலைவர், பேராசிரியர், மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில், 135 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. அண்ணா பல்கலை தரவரிசை பட்டியலில் மூன்றாமிடம் பிடித்த, எம்.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி லாவண்யாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.