/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் இன்று தொடக்கம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் இன்று தொடக்கம்
ADDED : ஜூலை 15, 2025 01:43 AM
கரூர், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டம் கரூர் மாவட்டத்தில் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.இது குறித்து, கலெக்டர் தங்கவேல் கூறியதாவது: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகளில், 12 முகாம், நகராட்சி பகுதிகளில், 9 முகாம், டவுன் பஞ்., பகுதிகளில், 8 முகாம், பஞ்சாயத்துகளில், 19 முகாம், புறநகர் பஞ்., பகுதிகளில் 12 முகாம் என, 60 முகாம்கள் இன்று முதல் ஆக., 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனை பேணும் வகையில், மருத்துவ சேவை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். அரசு துறைகள் மூலம் நகர் பகுதியில், 13 துறைகளில், 43 சேவைகள், கிராமப் புறங்களில், 15 துறையில், 46 சேவைகள் மற்றும் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான கோரிக்கை மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்படவுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.