/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உங்களுடன் ஸ்டாலின்' 2 வது நாள் முகாம் மகளிர் உரிமை தொகை கேட்டு மனு அதிகம்

ADDED : ஜூலை 17, 2025 01:32 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 2வது நாளாக, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில், 46புதுார் உட்பட, 3 இடங்களிலும் பிற பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம் நடந்தது.
இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 15ல் முகாம் துவங்கிய முதல் நாளில் மாவட்ட அளவில் பொதுவான கோரிக்கை தொடர்பாக, 2,526 மனுக்கள், மகளிர் உரிமைத்
தொகை பெற, 2,119 மனுக்கள் என, 4,645 மனுக்கள் பெறப்பட்டன. அடையாள அட்டை, நலத்திட்ட உதவி என, 37 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. நேற்று, 5,500 மனுக்கள் வரை வரப்பெறும் என எதிர்பார்க்கிறோம். நேற்று மதியம் வரையிலான நிலவரப்படி, 55 சதவீத மனுக்கள் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காகவே மனு வழங்கினர். இவ்வாறு கூறினர்.