/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று முதல் 29ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
இன்று முதல் 29ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்
இன்று முதல் 29ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்
இன்று முதல் 29ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : ஆக 26, 2025 01:21 AM
ஈரோடுஈரோடு மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் இன்று முதல், 29ம் தேதி வரை தினமும் காலை, 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்க உள்ளது.
இன்று ஈரோடு மாநகராட்சி மண்டலம்-2 - சம்பத் நகர் கொங்கு கலையரங்கம், பவானி நகராட்சி - பாலாஜி பத்மாவதி திருமண மண்டபம், பள்ளபாளையம் டவுன் பஞ்., - தங்கமேடு காஞ்சிகோவில் சாலை கவி மஹால், நெரிஞ்சிபேட்டை - சின்னப்பள்ளம் சர்ச் மண்டபம், மொடக்குறிச்சி எல்லக்கடை பொன்தாமரை மஹால், சத்தியமங்கலம் - சதுமுகை சவுடேஸ்வரியம்மன் மண்டபம், வரும், 28 ல் ஈரோடு மாநகராட்சி மண்டலம் - 1 - வீரப்பன்சத்திரம் பாவேந்தர் வீதி கொங்கு வேளாளர் திருமண மண்டபம், கோபி நகராட்சி - பச்சைமலை சாலை கம்பன் கலையரங்கம் திருமண மண்டபம், அரச்சலுார் - ஓடாநிலை சமுதாய கூடம், வெள்ளோட்டம் பரப்பு நடுப்பாளையம் சமுதாய கூடம், பவானிசாகர் உத்தமர் தியாகி ஐயா எம்.ஏ.ஈஸ்வரன் அரங்கம், வடமுகம் வெள்ளோடு தச்சங்கரை வழி, இருச முதலியார் குல பங்காளிகள் கூடத்தில் முகாம் நடக்க உள்ளது.
வரும், 29ல் ஈரோடு மாநகராட்சி மண்டலம் - 3 ல் ஜெகநாதபுரம் ஆர்ச் அருகே ஜனதாபுரம் சமுதாய கூடம், சத்தியமங்கலம் நகராட்சி - நிர்மலா தியேட்டர் சாலை வன்னியர் மஹால், பெத்தாம்பாளையம் ஆண்டவர் திருமண மண்டபம், ஆப்பக்கூடல் சுவாமி அபேதானந்தா திருமண மண்டபம், வேளாண்டம்பாளையம் பெருமாள் கோவில் மண்டபம், மொடச்சூர் வேட்டைக்காரன் கோவில் ஸ்ரீவாசு சென்னியப்ப மஹாலில் முகாம் நடக்க உள்ளது.