/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கு பொறியியல் கல்லுாரியில் ஸ்டார்ட் அப் மேனியா 9.0 போட்டி
/
கொங்கு பொறியியல் கல்லுாரியில் ஸ்டார்ட் அப் மேனியா 9.0 போட்டி
கொங்கு பொறியியல் கல்லுாரியில் ஸ்டார்ட் அப் மேனியா 9.0 போட்டி
கொங்கு பொறியியல் கல்லுாரியில் ஸ்டார்ட் அப் மேனியா 9.0 போட்டி
ADDED : டிச 22, 2024 01:32 AM
கொங்கு பொறியியல் கல்லுாரியில்
ஸ்டார்ட் அப் மேனியா 9.0 போட்டி
ஈரோடு, டிச. ௨௨-
சி.ஐ.ஐ., யங் இந்தியன்ஸ், நேட்டிவ் லீட் பவுண்டேசன்ஸ் மற்றும் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரி இணைந்து, மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் ஸ்டார்ட்--அப்களுக்கான 'ஸ்டார்ட் அப் மேனியா 9.0' போட்டியை அறிவித்தது.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து, 16 மாவட்டங்களில் உள்ள, 41 கல்லுாரிகளில் இருந்து, மாணவர் பிரிவில், 250 யோசனைகள்; பட்டதாரிகள் பிரிவில், 60 யோசனைகள் பெறப்பட்டன. இரண்டு சுற்று மதிப்பீடுகளுக்கு பிறகு, மாணவர் பிரிவில், 17 யோசனைகளும், பட்டதாரி பிரிவில், ஆறு யோசனைகளும் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்ட்டன. இறுதிச்சுற்று பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில் நடந்தது. இதில் பிரிவு வாரியாக வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
எக்கோப் ரொடெக்சன் என்ஜினீர்ஸ் பிரைவேட் லிமிடெட்- நிறுவனர் சந்திரசேகரன், தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கினார். யங் இந்தியன்ஸ் (ஈரோடு பிரிவு), என்.ஏ.என்., ஈரோடு ஆகியவற்றின் அலுவலக பணியாளர் மற்றும் உறுப்பினர்கள், பொறியியல் கல்லுாரி முதல்வர் பாலுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.