/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநில கலை திருவிழா; ஜன.,3க்கு மாற்றம்
/
மாநில கலை திருவிழா; ஜன.,3க்கு மாற்றம்
ADDED : டிச 06, 2024 07:44 AM
ஈரோடு: புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட கலை திருவிழா போட்டிகள் ஜன.,3 மற்றும் 4ம் தேதிகளில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான கலை திருவிழா போட்டி டிச.,5 மற்றும் 6ம் தேதிகளில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஒன்பது, 10ம் வகுப்பு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நடத்தப்படும் என ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. சமீபத்திய புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. புயல் பாதித்த மாவட்டங்களை சேர்ந்த மாணவ,மாணவியர் கலை திருவிழா போட்டியில் பங்கேற்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு கலை திருவிழா போட்டிகளை ஒத்தி வைத்தது. ஈரோடு மாவட்டத்தில் இப்போட்டிகள் வரும் ஜனவரி 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெற இருப்பதாக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.