மாநில ஜூனியர் கபடி போட்டி ஈரோடு வீரர்களுக்கு பயிற்சி
மாநில ஜூனியர் கபடி போட்டி ஈரோடு வீரர்களுக்கு பயிற்சி
ADDED : அக் 04, 2026 06:14 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை,:தமிழ்நாடு மாநில அளவிலான, 2026ஆம் ஆண்டுக்கான ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி, வேலுார் மாவட்டம் குடியாத்தத்தில் வரும், 9ம் தேதி தொடங்கி 11 வரை நடக்கிறது.
இதில் பங்கேற்கும் ஈரோடு மாவட்ட வீரர்களுக்கான பயிற்சி முகாம் சென்னிமலையில் தொடங்கியுள்ளது. மாவட்ட அளவில், 30 வீரர்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்னிமலையில் செயல்படும் பாரதி கபடி அகாடமியில், 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் இருந்து, 14 வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்த அணியே குடியாத்தத்தில் நடக்கும் மாநில போட்டியில் களமிறங்கும்.
