தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குடிநீர் குழாய் உடைப்பு நாளை சப்ளை நிறுத்தம்

குடிநீர் குழாய் உடைப்பு நாளை சப்ளை நிறுத்தம்

குடிநீர் குழாய் உடைப்பு நாளை சப்ளை நிறுத்தம்


ADDED : அக் 04, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2026 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு வ.உ.சி., பூங்கா மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து செல்லும் ராட்சத குழாயில் நீர் கசிவு ஏற்பட்டு குடிநீர் பம்பிங் செய்ய தாமதமாகிறது. இதை சரி செய்யும் பணி நாளை நடக்கிறது.

இதனால் பவானி ரோடு, அஜந்தா நகர், வி.ஜி.பி.நகர், பி.பெ.அக்ரஹாரம், ஈதுகா வீதி, வ.உ.சி., பூங்கா மூன்று மேல்நிலை தொட்டிகள், கக்கன் நகர், கருங்கல்பாளையம் 1,2, காந்திஜி ரோடு, பெரியார் நகர், காதர் பாட்ஷா தெரு, சென்னிமலை 1,2, முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் 3,2 கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட் 2 மேல்நிலை தொட்டிகள், சுதந்திரபுரம், டாலர்ஸ் காலனி, கெட்டி நகர், தணிகை நகர், பாரதி நகர், முத்துசாமி காலனி குடிநீர் மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றம் செய்ய இயலாது. இதனால் இப்பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us