/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநில அடைவு தேர்வு ஆய்வு கூட்டம் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்பு
/
மாநில அடைவு தேர்வு ஆய்வு கூட்டம் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்பு
மாநில அடைவு தேர்வு ஆய்வு கூட்டம் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்பு
மாநில அடைவு தேர்வு ஆய்வு கூட்டம் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 05, 2025 01:15 AM
ஈரோடு, பள்ளி கல்வித்துறை சார்பில், தலைமை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான அடைவு தேர்வு ஆய்வு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. சென்னிமலை, பவானிசாகர், ஈரோடு மற்றும் மொடக்குறிச்சி வட்டாரங்களை சேர்ந்த, தலைமை ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்கள் என, ௫௦௦க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 3, 5, 8ம் வகுப்பு கற்றல் அடைவு திறனில் கடைசியில் இருந்து மூன்றாவது மாவட்டமாக ஈரோடு உள்ளது. இதுவரை, 16 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
3, 5ம் வகுப்பு கற்றல் அடைவில் ஈரோடு மாவட்டத்தில் ஆறு ஒன்றியங்கள் பின்தங்கி உள்ளன. கற்றல் திறன் யுக்தியை மாணவர்களிடம், ஆசிரியர்கள் முறையாக எடுத்து செல்லுதல் குறித்து விளக்கப்பட்டது. எட்டாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவு பின்னோக்கி உள்ளது. இதை ஆசிரியர்கள் உணர்ந்து மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக பாடங்களை நடத்துதல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.