/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நம்பியூரில் மாநில மாரத்தான் போட்டி; 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ADDED : செப் 29, 2025 07:17 AM
நம்பியூர்: -நம்பியூர் காமராஜ் கல்வி நிறுவனம் சார்பில், மாநில அளவிலான மாரத்தான் போட்டி, நம்பியூரில் நேற்று நடந்தது. இதில் ஐந்து வயது முதல் 12 வயது வரை; 13 வயது முதல் 19 வயது; 20 முதல் 40 வயது; 40 வயதுக்கும் மேற்பட்டோர் என நான்கு பிரிவுகளில், ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே போட்டி நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து, 2,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், 200க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் ரொக்கப்பரிசு, கேடயம், பதக்கம், சான்றிதழ், டி-சர்ட் தரப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ், பதக்கம், உணவு வழங்கப்பட்டது. நம்பியூர் காமராஜ் கல்வி நிறுவன வளாகத்தில் நடந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவன தாளாளர் ஜவகர் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஈரோடு கலெக்டர் கந்தசாமி பரி வழங்கினார். ஈரோடு வடக்கு மாவட்ட காங்., தலைவர் சரவணன், மனிதம் சட்ட உதவி மைய நிர்வாகியும், கோபி மாவட்ட திராவிடர் கழக தலைவருமான வழக்கறிஞர் சென்னியப்பன், நம்பியூர் வட்டார காங்., தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி செயலர் சுமதி ஜவகர் நன்றி கூறினார்.