/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் பயணிகள் உடமைகளை பரிசோதிக்க அதிநவீன ஸ்கேனர் வசதி
/
ஈரோட்டில் பயணிகள் உடமைகளை பரிசோதிக்க அதிநவீன ஸ்கேனர் வசதி
ஈரோட்டில் பயணிகள் உடமைகளை பரிசோதிக்க அதிநவீன ஸ்கேனர் வசதி
ஈரோட்டில் பயணிகள் உடமைகளை பரிசோதிக்க அதிநவீன ஸ்கேனர் வசதி
ADDED : அக் 01, 2024 07:38 AM
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும், 55க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. தென்னக ரயில்வே சேலம் கோட்டத்தில் முக்கிய கேந்திரமாக ஈரோடு விளங்குகிறது. ரயில்வே ஸ்டேஷனை நவீனமயமாக்க தேர்வு செய்து மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தில், பல கோடி மதிப்பில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்க பணிகளும் நடந்து வருகிறது. ரயில்வே ஸ்டேஷனில் ஏற்கனவே எஸ்கலேட்டர், லிப்ட் வசதிகள், தங்கும் அறைகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
இந்நிலையில் ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக நாட்டில் சர்வதேச விமான நிலையங்களில் இருப்பது போன்று எக்ஸ்ரே ஸ்கேனர் பரிசோதனை முறை அமலாகிறது.
இதற்காக எக்ஸ்ரே ஸ்கேனர் கருவி, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன்புற பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மின் இணைப்பு மட்டும் வழங்க வேண்டும். மின் இணைப்பு வழங்கினால் எக்ஸ்ரே ஸ்கேனர் கருவி செயல்பாட்டுக்கு வந்து விடும்.
விரைவில் மின் இணைப்பு வழங்கப்பட்டு சோதனை ஓட்டம் தொடரும். 10 நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.