/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பங்கு சந்தை முதலீடு: ரூ.2.75 கோடி மோசடி
/
பங்கு சந்தை முதலீடு: ரூ.2.75 கோடி மோசடி
ADDED : அக் 16, 2025 09:28 PM
ஈரோடு: ஷேர் மார்க்கெட் முதலீடு ஆசை காட்டி, 2.75 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
ஈரோடு, வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்தவர் நரேஷ்குமார், 41; எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர். இவர், ஷேர் மார்க்கெட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது மொபைல்போனில் பேசிய நபர், 'ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும்; அதற்கு ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்' என, கூறியுள்ளார்.
இதை நம்பி செயலியை பதிவிறக்கம் செய்து, ஜூலை 9 முதல், நரேஷ்குமார் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். துவக்கத்தில் 5 லட்சம் ரூபாயை முதலீடு செய்துள்ளார். ஒரு வாரத்துக்கு முன் வரை, 2.75 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளார்.
இந்நிலையில், செயலியில் முதலீடுடன் வருவாய், 9 கோடி ரூபாய் என காட்டியுள்ளது. பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
ஆவணங்கள் அனைத்தையும் சென்னை சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பி வைத்து, நரேஷ்குமாரையும் விசாரணைக்கு சென்னை அனுப்பி வைத்தனர்.