ADDED : அக் 17, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோட்டில் முதுகலை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம், இரண்டாவது நாளாக நேற்றும் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் பேசினார். இதில் அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளை சேர்ந்த முதுகலை ஆசிரியர், 140 பேர் பங்கேற்றனர்.
கடந்தாண்டு பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொது தேர்வு முடிவு, தற்போது முடிந்த காலாண்டு தேர்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டு இந்த கூட்டம் நடத்தப்பட்டது. வணிகவியல், கணக்கு பதிவியல் பாட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.