பதுக்கிய 185 கிலோ குட்கா பறிமுதல்; 'புரூஸ் லீ ' கைது
பதுக்கிய 185 கிலோ குட்கா பறிமுதல்; 'புரூஸ் லீ ' கைது
ADDED : அக் 19, 2026 06:33 AM
பவானிசாகர்:பவானிசாகரை
அடுத்த கொத்தமங்கலம், நெருஞ்சிப்பேட்டையில், குட்கா பொருட்கள்
பதுக்கி வைத்து விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்படி, பவானிசாகர்
போலீசார் நேற்று ரோந்தில் ஈடுபட்டனர்.
தயிர்பள்ளம் சுரேஷ்குமார்
என்பவருக்கு சொந்தமான நாயக்கர் தோட்டத்தில் உள்ள குடோனில்
சோதனையிட்டனர். 20க்கும் மேற்பட்ட சாக்குப்பைகளில் ஹான்ஸ்
பான்மசாலா, கூல் லிப், விமல் பாக்கு உள்ளிட்ட, 185 கிலோ குட்கா
பொருட்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு,
1.30 லட்சம் ரூபாய். குடோன் உரிமையாளர் சுரேஷ்குமார், 32, இக்கரை
தத்தபள்ளியை சேர்ந்த புரூஸ் லீ, 38, இருவரும் சேர்ந்து, மொத்த விற்பனை
செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. சுரேஷ்குமார் தலைமறைவான
நிலையில், 185 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து புரூஸ்லீயை கைது
செய்தனர்.
