/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
4 டவுன் பஞ்.,களுக்குகுடிநீர் சப்ளை நிறுத்தம்
/
4 டவுன் பஞ்.,களுக்குகுடிநீர் சப்ளை நிறுத்தம்
ADDED : ஜன 08, 2025 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
4 டவுன் பஞ்.,களுக்குகுடிநீர் சப்ளை நிறுத்தம்
ஈரோடு, :சித்தோடு-கவுந்தப்பாடி-கோபி நெடுஞ்சாலையில் விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. நல்லாம்பட்டி, காஞ்சிகோவில், பெத்தாம்பாளையம், பள்ளபாளையம் டவுன் பஞ்.,களுக்கான கூட்டு குடிநீர் திட்டம், சித்தோடு - கவுந்தப்பாடி - கோபி நெடுஞ்சாலை, தயிர்பாளையம் அருகே உள்ளது. அவ்விடத்தில் பிரதான குடிநீர் குழாய்களை தோண்டி எடுத்து, சாலையின் அருகே இடமாற்றம் செய்யப்படவுள்ளது. எனவே இந்த டவுன் பஞ்.,களுக்கு நாளை முதல் 12ம் தேதி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.