ADDED : அக் 02, 2026 02:57 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு கொல்லம்பாளையம் கே.டி.ராஜீவ் வீதியை சேர்ந்தவர் சுலோச்சனா, 75; நேற்று முன்தினம் நள்ளிரவில், வீட்டருகில் பாதி மூடிய நிலையில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.
50 அடி ஆழ கிணற்றில், 24 அடிக்கு தண்ணீர் இருந்தது. கயிற்றை இறுக்கமாக பிடித்து கொண்டதால் மூழ்காமல் சத்தமிட்டார். அலறல் கேட்டு சென்ற மக்களால் மீட்கப்பட முடியாத நிலையில், ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்-டது. வீரர்கள் சுலோச்சனாவை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதில் சுலோச்சனா லேசான காயம் அடைந்தார்.
