/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடுமுடியில் தெருநாய்களால் தொல்லை அதிகரிப்பு வெறிநாய்களாக மாறும் முன் நடவடிக்கை தேவை

ADDED : ஜன 01, 2025 01:15 AM
கொடுமுடி, ஜன. 1-
கொடுமுடியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடுமுடி பேரூரட்சியில், 15 வார்டுகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. கொடுமுடி நகருக்குள் மகுடேஸ்வரர், வீரநாராயணப்பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், மலையம்மன் கோவில், எல்லை பகவதியம்மன் மற்றும் ஓம் காளியம்மன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் உணவை உண்ட பிறகு மீதியை விட்டுச் செல்கின்றனர். இதை தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் உண்டு வளர்கின்றன.
தற்போது நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, நுாற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் கொடுமுடி தெருக்களில் சுற்றித் திரிகின்றன. கோவில் தெரு, வடக்கு தெரு, மணிக்கூண்டு, எஸ்.என்.பி.நகர், பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எந்நேரமும் திரியும் தெருநாய்களால் மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் திடீரென குறுக்கே வரும் நாய்களால் விபத்தை சந்திக்கின்றனர். கடைகளுக்கு செல்லும் சிறுவர், சிறுமியர் தாங்கள் வங்கி வரும் பொருட்களை தெருநாய்களிடம் பறிகொடுக்கின்றனர்.
இரவு, பகல் பாராமல் ஆக்ரோஷமாக மோதி சண்டையிட்டுக் கொள்வதால், மக்கள் துாக்கத்தை இழக்கின்றனர். தெருநாய்கள் வெறிநாய்களாக மாறி ஆபத்தை அதிகரிக்கும் முன், பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.