ADDED : ஜூன் 21, 2026 04:19 AM
பவானி:திருநல்வேலி,
காவல்கிணறை சேர்ந்தவர் ஆஷா பிரீத்தி, 19; நசியனுாரில் உள்ள ஒரு
தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயிற்சிக்காக வந்துள்ளார்.
அவருடன் தங்கையும் இருந்துள்ளார். இந்நிலையில் ஆஷா பிரீத்தி நேற்று
முன்தினம் காலை மாயமாகி விட்டார். அவரது தாய் புகாரின்படி சித்தோடு
போலீசார் தேடி வருகின்றனர்.
* கோபி அருகே பொலவக்காளிபாளையத்தை
சேர்ந்த கூலி தொழிலாளி சிவசங்கர், 21; வேலைக்கு செல்வதாக வீட்டில்
இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. தாய் மகேஸ்வரி புகாரின்படி
கோபி போலீசார் தேடி வருகின்றனர்.
* சித்தோடு அருகே
ஆட்டையாம்பாளையத்தை சேர்ந்தவர் மாரிசாமி, 53; லாரி டிரைவர். இவரின்
மகள் தேன்மொழி, 23; திண்டலில் ஒரு துணிக்கடையில் பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மாரிசாமி புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.
