ADDED : ஜூன் 21, 2026 04:20 AM

பவானிசாகர்:பவானிசாகர்
யூனியன் உத்தண்டியூர் பஞ்., இந்திரா நகரில், நுாற்றுக்கும் மேற்பட்ட
குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு பவானி ஆற்றில் இருந்து
குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இரு வாரங்களாக சரிவர
குடிநீர் வினியோகம் செய்யாததால் அவதிக்கு ஆளாகினர். பஞ்.,
நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால்,
நுாற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நேற்று,
சத்தி-மேட்டுப்பாளையம் சாலையில் அய்யன் சாலை பஸ் நிறுத்தம் அருகே
மறியலில் ஈடுபட்டனர். அப்போது வந்த அரசு பஸ்ஸை சிறைபிடித்தனர்.
பவானிசாகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் அடையாத
பெண்களிடம் பவானிசாகர் பி.டி.ஓ.,செந்தில்குமார் பேசினார். அப்போது
பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.குடிநீர் வினியோக
பாதிப்பு குறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தால் சம்பவ இடத்துக்கு
வரும் அலுவலர்கள் போட்டோ மட்டும் எடுத்து செல்கிறார்கள் என்றனர்.
மேலும், குடிநீரில் புழுக்கள் கலந்து வருவதாக குற்றம் சாட்டினர். உரிய
நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறவே, மறியலை கைவிட்டனர். மறியலால் அரை
மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
