/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் மாணவர் படைப்பாற்றல் கண்காட்சி
/
நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் மாணவர் படைப்பாற்றல் கண்காட்சி
நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் மாணவர் படைப்பாற்றல் கண்காட்சி
நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் மாணவர் படைப்பாற்றல் கண்காட்சி
ADDED : பிப் 08, 2025 06:36 AM
ஈரோடு: ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில், கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தும் வகையில், 14வது மாணவர்களின் படைப்பாற்றல் கண்காட்சி நந்தா தொழில் நுட்ப கல்லுாரியில் நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார்.
ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், தனியார் பள்ளி-களின் மாவட்ட கல்வி அதிகாரி
கேசவகுமார் துவக்கி வைத்தனர்.ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலைய தாளாளர் செல்வராஜ், பெருந்துறை சாகர் பன்னாட்டு பள்ளி
தாளாளர் சவுந்திரராஜன், ஐ.எம்.ஏ., சங்க முன்னாள் தலைவரும் நெக் கேர் மருத்துவமனை
தலைவருமான ராஜா, அந்தியூர் விஸ்வேஷ்ரய்யா மெட்ரிக் பள்ளி தாளாளர் சுப்பிரமணியன்,
சீனாபுரம் கொங்கு வெள்ளாளர் பாலி-டெக்னிக் கல்லுாரி முதல்வர் விஸ்வநாதன் மற்றும் ஜேசீஸ் மெட்ரிக்
பள்ளி தாளாளர் நாகராஜன் உள்ளிட்டோர், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களின் படைபாற்றல்
அடங்கிய ஏனைய கண்காட்சி பகுதிகளை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்-தனர்.கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களின் மருத்-துவம், அறிவியல், பொறியியல் சார்ந்த,
1,412க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலர்
நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை நிர்வாக அலுவலர்
ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.