ADDED : ஆக 25, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம், காந்திபுரத்தை சேர்ந்த மனோகரன் மகன் அஸ்வந்த், 19; பொள்ளாச்சி தனியார் பாலிடெக்னில் கல்லுாரி மாணவன். உறவினர் வீட்டு விசேஷத்துக்கு தாராபுரம் வந்த உறவினர்கள் ஈஸ்வரன், மோகன கிருஷ்ணன் உள்ளிட்டோருடன், தாராபுரம்-க-லங்கியம் ரோடு அமராவதி ஆற்று பாலத்தின் அருகே குளிக்க நேற்று காலை, 7:00 மணியளவில்
சென்றார்.
நீச்சல் தெரியாத நிலையில் குளிக்க துவங்கிய சில நிமிடங்களில் ஆற்றில் மூழ்கி மாயமானார். தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடலை மீட்டனர். அபாய சுழல் உள்ள பகுதி என எச்ச-ரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் வாலிபரே அது தெரியாமல், நீரில் மூழ்கி பலியானது, சோகத்தை ஏற்படுத்தி-யது.

