தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காவிரி ஆற்றில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி பலி

காவிரி ஆற்றில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி பலி

காவிரி ஆற்றில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி பலி


ADDED : ஏப் 25, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி, பவானி அருகே காடப்பநல்லுார், கோவிந்தம்பாளையத்தை சேர்ந்தவர் குமார், 49; வேன் டிரைவர்.

இவரின் மகன்கள் கவின்ராஜ், 21: பிரவீன், 18; பெருந்துறை அருகே மேட்டுக்கடையில் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில், கவின்ராஜ், இ.இ.இ., மூன்றாம் ஆண்டு படித்தார்.

நேற்று முன்தினம் மதியம், நண்பர்கள் கோகுல், சதீஷ், மனோஜ் ஆகியோருடன், அருகில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க கவின்ராஜ் சென்றுள்ளார். அரை மணி நேரம் கழித்து கவின்ராஜுூடன் சென்றவர்கள், அவரது வீட்டுக்கு சென்றனர். ஆற்றில் நீச்சல் அடித்து மறுகரைக்கு சென்ற உங்களின் மகன் நீண்ட நேரமாகி திரும்ப வரவில்லை என்று தெரிவித்தனர்.

அதிர்ச்சி அடைந்த குமார், பவானி தீயணைப்புத்துறையினருக்கு குமார் தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய வீரர்கள் மூன்று மணி நேரம் தேடிய நிலையில், கவின்ராஜ் உடல் கிடைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us