ADDED : மே 26, 2025 03:56 AM
தாராபுரம்: தாராபுரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட, சட்டக்கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
தாராபுரத்தை அடுத்த மணக்கடவை சேர்ந்தவர் மித்ரா, 22; கோவை சட்டக் கல்லுாரி நான்காமாண்டு மாணவி, தாராபுரத்தை அடுத்த குள்ளாய்பாளையத்தை சேர்ந்த வாலிபரை காதலித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்கவிருந்தது. இந்நி-லையில் திருமண செலவுக்கு பணம் இல்லாததால், பூர்வீக நிலத்தை விற்கும் நிலைக்கு மித்ராவின் குடும்பம் தள்ளப்பட்-டது. இதனால் மனமுடைந்த மித்ரா, நேற்று முன்தினம் சாணிப்ப-வுடரை குடித்து விட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.சூதாடிய 5 பேர் கைது
காங்கேயம், மே 26
காங்கேயத்தில் சென்னிமலை சாலையில், நேற்று சூதாட்டம் நடப்பதாக, காங்கேயம் போலீசாருக்கு தகவல் வந்தது.
ஊதியூர் போலீசார் நடத்திய சோதனையில், இல்லியம்புதுாரை சேர்ந்த சிவகுமார், 47; அரச்சலுார், அம்மாபாளையம் குப்பி-யண்ணன், 40; சடையம்பாளையம், எரகம்பட்டி கனியாளன், 55; திருப்பூர் ரோடு ராம்குமார், 45; காடையூர் நடராஜ், 51, என ஐந்து பேரை கைது செய்தனர். ஐந்து பேரிடமும் இருந்து, 6,௦௦௦ ரூபாயை
பறிமுதல் செய்தனர்.

