/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அகழி போல் குழி பறித்து வழித்தடம் மறிப்பு பள்ளி செல்ல முடியாமல் மாணவர் தவிப்பு

ADDED : அக் 26, 2024 07:59 AM
அந்தியூர்: அந்தியூர் அருகே முத்துக்கவுண்டன்புதுாரை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், ஊர்மக்கள், அந்தியூர் தாசில்தார் அலுவலகத்துக்கு நேற்று வந்து, மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதா-வது:
நாங்கள் இப்பகுதியில் ஐந்து தலைமுறைகளாக வசித்து, விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் அருகில் உள்ள மொசக்கவுண்-டனுார் அரசு பள்ளியில் படிக்கின்றனர். நாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த நடைபா-தையில், நேற்று முன்தினம் மாலை அப்-பகுதியை சேர்ந்த சிலர், இயந்திரம் மூலம் பாதையில் அகழிபோல் குழி பறித்துள்ளனர்.இதனால் மாணவ, மாணவிகள், ௪ கி.மீ., துாரம் சுற்றி பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் இதுகுறித்து உரிய நடவ-டிக்கை எடுத்து, எங்கள் குழந்தைகள் பள்ளி சென்று வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்-ளனர்.
நேற்று பாதை அடைக்கப்பட்டதால், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லமுடியாமல், 15க்கும் மேற்பட்டோர், பெற்றோருடன் தாலுகா அலுவலகம் வந்திருந்தனர். தாசில்தார் கவியரசு இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.