ADDED : ஆக 21, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
கொத்துக்காரர் தோட்டம் விஜயலட்சுமி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த
ஆறுமுகம்-மாதம்மாள் தம்பதி மகள் அஸ்மிதா, 15; கருத்து வேறுபாட்டால்
கணவனை பிரிந்த மாதம்மாள், 10 ஆண்டாக மகளுடன் வசிக்கிறார்.
பத்தாம்
வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த அஸ்மிதா, இரு மாதத்துக்கு முன்
எழுதிய துணைத்தேர்விலும் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன வேதனையில்
இருந்த மாணவி, 19ம் தேதி மதியம் துாக்கிட்டு கொண்டார்.
ஈரோடு அரசு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே இறந்து
விட்டது தெரிய வந்தது. வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து
விசாரிக்கின்றனர்.
