/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
46 ஆண்டுகள் கழித்து கல்லுாரியில் ஆசிரியரை சந்தித்த மாணவர்கள்
/
46 ஆண்டுகள் கழித்து கல்லுாரியில் ஆசிரியரை சந்தித்த மாணவர்கள்
46 ஆண்டுகள் கழித்து கல்லுாரியில் ஆசிரியரை சந்தித்த மாணவர்கள்
46 ஆண்டுகள் கழித்து கல்லுாரியில் ஆசிரியரை சந்தித்த மாணவர்கள்
ADDED : ஆக 07, 2025 01:31 AM
ஈரோடு, ஈரோடு சி.என்.சி., கல்லுாரியில் கடந்த 1978-81 வரை பி.எஸ்.சி. கணிதம் படித்த மாணவர்கள், 46 ஆண்டுக்கு பின் நேற்று ஒன்றாக சிக்கய்யா அரசு கலை அறிவியல் கல்லுாரி கணித பிரிவில் சந்தித்து கொண்டனர்.
அப்போது தங்கள் கல்லுாரி நாட்களில் நடந்த நிகழ்வுகளை, பகிர்ந்து கொண்டு பரவசம் அடைந்தனர். இதில் முன்னாள் மாணவர்கள், 15 பேர் பங்கேற்றனர். 1978-81ம் ஆண்டில் கணித பேராசிரியராக இருந்த கந்தசாமியை நேரில் வரவழைத்து, பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். மேலும் அவரை பாடம் எடுக்க சொல்லி முன்னாள் மாணவர்கள் அனைவரும் பெஞ்சில் அமர்ந்து பாடங்களை கவனித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் திருகுமரன், கணித பிரிவு தலைமை பேராசிரியர் வள்ளியாத்தாள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முன்னாள் மாணவர் பால கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
வரும் நாட்களில் படித்த கல்லுாரிக்கு முன்னாள் மாணவர்கள் நினைவாக, உட்கட்டமைப்பை மேம்படுத்தி தரப்படும். இனி வரும் நாட்களில் நடக்கும் கூட்டத்தில் குடும்பத்துடன் வந்து பங்கேற்க முடிவு செய்துள்ளோம். இதுபற்றி ஆலோசிக்கிறோம் என முன்னாள் மாணவர்கள்
தெரிவித்தனர்.