/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மத்திய அரசு சட்ட நகலை கிழித்து மா.திறனாளிகள் போராட்டம்
/
மத்திய அரசு சட்ட நகலை கிழித்து மா.திறனாளிகள் போராட்டம்
மத்திய அரசு சட்ட நகலை கிழித்து மா.திறனாளிகள் போராட்டம்
மத்திய அரசு சட்ட நகலை கிழித்து மா.திறனாளிகள் போராட்டம்
ADDED : ஜன 07, 2026 06:22 AM

ஈரோடு: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது-காப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், நகர உதவி தலைவர் ராஜூ தலைமையில், சட்ட நகல் கிழிப்பு போராட்டம், ஈரோடு, யூனியன் அலுவலகம் முன் நடத்தினர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகள், கிராமப்புற ஏழைகள் வேலை மூலம் வாழ்-வாதாரம் பெற்றனர். இத்திட்டத்தின் பெயரை மாற்றி, நிதியை மத்திய அரசு குறைத்துள்ளதால் இவர்கள் வேலை இழப்பை சந்-திக்க உள்ளனர். சட்ட திருத்தத்தை திரும்ப பெற்று, திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். வேலை நாட்களை அதிகப்படுத்தி, கூலியை உயர்த்தி வழங்ககோரி, மத்திய அரசின் சட்ட திருத்த நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், வட்டார செயலாளர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநி-லக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, சிஐடியு தலைவர் காசி விஸ்வ-நாதன் முன்னிலையில் சுற்றுவட்டார அனைத்து வகை மாற்று திற-னாளிகள், மத்திய அரசின் சட்ட நகலை கிழித்து, கண்டன கோஷ-மிட்டனர்.
* அந்தியூர் யூனியன் அலுவலகம் முன், அனைத்து வகை மாற்-றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், தாலுகா செயலாளர் முருகன் தலைமையில் நடந்த போராட்டத்தில், 20க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

