sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோடை விடுமுறை முடிந்து மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு

/

கோடை விடுமுறை முடிந்து மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு

கோடை விடுமுறை முடிந்து மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு

கோடை விடுமுறை முடிந்து மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு


ADDED : ஜூன் 03, 2025 01:24 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அரசு பள்ளிகளுக்கு மாணவ--மாணவியர் சீருடை அணிந்து வந்தனர். ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

* ஈரோடு ப.செ.பார்க் மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு ரோஜாப்பூ, கல்கண்டு கொடுத்து ஆசிரியைகள் வரவேற்றனர்.

* ஈரோடு எஸ்.கே.சி சாலை மாநகராட்சி நடுநிலை பள்ளியில், பேண்ட் வாத்தியங்கள் முழங்க, ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டனர். முதல் வகுப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது.

* பவானியில், ஈரோடு சாலை சுவாமி விவேகானந்தா அரசு நிதி உதவி பெறும் பள்ளியில், சிவப்பு கம்பளம் விரித்து, மேள-தாளம் முழங்க மாணவர்களுக்கு வரவேற்பு தரப்பட்டது.

கம்பளத்தின் மீது கம்பீரமாக நடந்து வந்த மாணவர்களை, சந்தனம், குங்குமமிட்டு, ரோஜா பூ வழங்கியும், இனிப்பு கொடுத்தும், ஆசிரியர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.

நோட்டு புத்தகம்

வழங்கிய அமைச்சர்

ஈரோடு, நஞ்சப்பகவுண்டன்வலசு அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி திறப்பு, பாடப்புத்தகங்கள் வழங்குதல், கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜேஷ் வரவேற்றார். ஈரோடு எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகதரத்தினம் முன்னிலை வகித்தனர். வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்து, குழந்தைகளுக்கு பாடப்புத்தம் வழங்கினார். பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்று, கேடயம் வழங்கப்பட்டது.

கோபியில்...

கோபி யூனியனில், 71 துவக்கப்பள்ளி, 20 நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலா 10 என, 111 பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் வகுப்பு, ஆறாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர் சேர்க்கையும் நடந்தது. இலவச நோட்டு மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. துவக்கப்பள்ளியில் சாக்லெட், கடலை மிட்டாய் கொடுத்து குழந்தைகளை, ஆசிரியர்கள் வரவேற்றனர்.

* சென்னிமலை, காமராஜ் நகர், அரசு உயர்நிலைப்பள்ளியில், அரசின் விலையில்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் செந்தில்நாதன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி, 12வது வார்டு கவுன்சிலர் ஹேமலதா உட்பட பலர் பங்கேற்றனர்.

பெருந்துறையில்...

பெருந்துறையில் பல்லகவுண்டன்பாளையம் மற்றும் சரவணபுரம் அரசு மேல்நிலை பள்ளிகளில், மாணவ-மாணவியரை எம்எல்ஏ ஜெயக்குமார், ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றார். பல்லகவுண்டன்பாளையம் பள்ளியில் கலையரங்கம் கட்ட, தனது சொந்த நிதியில் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக எம்.எல்.ஏ., தெரிவித்தார். சுண்டக்கம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, ரோஜா பூ கொத்து கொடுத்து, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் தலைமை ஆசிரியர் காளியப்பன் வரவேற்றனர்.

அந்தியூரில்...

---அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பயிலும், 484 மாணவர்களுக்கும், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், 869 மாணவிகளுக்கும், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம். விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்கினார்.

நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் புஷ்பராணி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அர்த்தநாரி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நல்லசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

யோகா வகுப்பு ஆரம்பம்

தமிழக அரசு சார்பில், பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவ--மாணவிகளுக்கு பாடப்புத்தகம், நோட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் வழங்கப்பட்டது. மேல்நிலை பள்ளிகளில் தொடர்ந்து, 15 நாட்களுக்கு தினமும் மாலையில் ஒரு மணி நேரம், நல்லெழுக்கம், யோகா, உடற்பயிற்சி, தியானம், விளையாட்டு கற்று கொடுக்கப்படுகிறது. நேற்று மாலை இது நடைமுறைக்கு வந்தது. இதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை உணவு திட்டத்தில், முதல் நாளான நேற்று பொங்கல் வழங்கப்பட்டது. வாரந்தோறும் இனி திங்கள், புதன்கிழமைகளில் பொங்கல் வழங்கப்படும். பிற நாட்களில் கோெதுமை உப்புமா, சேமியா கிச்சடி வழங்கப்படும்.

நிருபர் குழு






      Dinamalar
      Follow us