/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'கல்லுாரி கனவு' நிகழ்ச்சியை கவனிக்க ஆர்வமின்றி மொபைலில் மூழ்கிய மாணவ, மாணவியர்

ADDED : மே 15, 2025 01:49 AM
கோபி :கோபியில் நேற்று நடந்த, 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சியில் பங்கேற்ற, மாணவ, மாணவியரில் சிலர், நிகழ்ச்சியை கவனிக்க ஆர்வமின்றி, தாங்கள் கொண்டு வந்திருந்த மொபைல்போனில் மூழ்கி நேரத்தை கழித்து கொண்டிருந்தனர்.
'நான் முதல்வன்' திட்டத்தில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரின் உயர் கல்விக்கான வழிகாட்டும், 'கல்லுாரி கனவு' எனும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம், கோபி கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. 60 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் உயர்கல்வியின் அவசியம், அனுபவ பகிர்வு, பொறியியல், வேளாண்மை, மருத்துவம் சார்ந்த படிப்பு, உயர் கல்விக்கான ஆலோசனை, தொழில்நுட்ப படிப்பு, கல்வி கடன் வசதி குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், கல்வி துறையினர் பங்கேற்றனர்.
உயர்கல்விக்கான வழிகாட்டு நிகழ்ச்சியின்போது, சப்-
கலெக்டர் சிவானந்தம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், பல முக்கிய தகவல்களை வலியுறுத்தி பேசினர். அந்த சமயத்தில் அரங்கில் பார்வையாளராக அமர்ந்திருந்த, பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் பெரும்பாலானோர் கவனித்தனர். ஆனால் சில மாணவ, மாணவியர் எதையும் கவனிக்காமல், அவரவர் கையில் கொண்டு வந்திருந்த மொபைல்போன்களை பார்த்தபடி, தங்களுக்குள் பேசிக் கொண்டு நேரத்தை வீணடித்தனர்.