/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாநகராட்சி பகுதியில் வரி விதிப்பு குறித்து ஆய்வு
/
ஈரோடு மாநகராட்சி பகுதியில் வரி விதிப்பு குறித்து ஆய்வு
ஈரோடு மாநகராட்சி பகுதியில் வரி விதிப்பு குறித்து ஆய்வு
ஈரோடு மாநகராட்சி பகுதியில் வரி விதிப்பு குறித்து ஆய்வு
ADDED : செப் 04, 2025 01:51 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சியில், வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெரும்பாலும் சாலை பிரச்னை, வரி விதிப்பில் பிரச்னை போன்றவை குறித்த மனுக்கள் பெறுப்படுகிறது. இதன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, கமிஷனர் அர்பித் ஜெயின், 24வது வார்டு பம்பிங் ஸ்டேஷன் ரோடு, 7வது வார்டு அக்ரஹாரம், 3வது வார்டு மங்கலத்துறை, 1வது வார்டு ராஜபாளையம் புதுார் உள்ளிட்ட பகுதிகளில், தார்ச்சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
இதேபோல், சத்தி ரோட்டில் உள்ள காலியிடத்திற்கான வரி, பவானி மெயின் ரோடு மற்றும் ராஜபாளையம் புதுாரில் சொத்துவரி விதிப்பதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது ஆய்வு நடத்தி, தற்போதுள்ள நடைமுறைப்படி வரிகளை போடுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் அக்ரஹாரத்தில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பார்வையிட்ட கமிஷனர், சீரான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தவிர, அக்ரஹாரத்தில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையம், அங்கன்வாடி மையம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
துணை கமிஷனர் தனலட்சுமி, உதவி கமிஷனர் சரோஜாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.