/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில்வே நுழைவு பாலங்களை அகலப்படுத்துவது பற்றி ஆய்வு
/
ரயில்வே நுழைவு பாலங்களை அகலப்படுத்துவது பற்றி ஆய்வு
ரயில்வே நுழைவு பாலங்களை அகலப்படுத்துவது பற்றி ஆய்வு
ரயில்வே நுழைவு பாலங்களை அகலப்படுத்துவது பற்றி ஆய்வு
ADDED : ஜன 04, 2025 01:41 AM
ஈரோடு, ஜன. 4-
ஈரோடு மாநகராட்சி மற்றும் பெருந்துறை பகுதியில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். மாநகராட்சிக்கு உட்பட்ட கே.கே.நகர் ரயில்வே நுழைவு பாலத்தில், தற்போதைய போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப அகலமில்லை. பாலத்தின் அருகே, 6.70 மீட்டர் அகலம் மற்றும் 5.5 மீட்டர் உயரம் கொண்ட, 2 கண்ணரை பாலம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தார்.
பின், காளை மாட்டு சிலை சந்திப்பு ரயில்வே நுழைவு பாலமும், போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளதால், பெரிய அளவில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது பற்றி ஆய்வு செய்தார்.
பின் பெருந்துறை ஆர்.எஸ்., ரயில்வே நுழைவு பாலம் அருகே புதிதாக, 6.70 மீட்டர் அகலம், 5.5 மீட்டர் உயரத்தில், 2 கண்ணரை பாலம் அமைக்க அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்தார்.
பின், அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வு கூட்டத்தில், ரயில்வே துறை மூலம் ஈரோடு - கரூர் சாலையில் கேட்டுப்புதுார், ஆரியங்காட்டுவலசு, மொடக்குறிச்சி சாவடிப்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே நுழைவு பாலங்களையும், 6.7 மீட்டர் அகலம், 5.5 மீட்டர் உயரம் கொண்ட, 2 கண்ணரை பாலமாக அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

