/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்ட நீதிமன்றம் கோரி முதல்வரிடம் மனு வழங்கல்
/
மாவட்ட நீதிமன்றம் கோரி முதல்வரிடம் மனு வழங்கல்
ADDED : டிச 20, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின், நேற்று ஈரோடு வந்தார்.
கோவையிலிருந்து காரில் ஈரோட்டுக்கு வந்த நிலையில், பெருந்துறையில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பளித்தனர். அப்போது பெருந்துறை வக்கீல் சங்கம் சார்பில், முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், பெருந்துறைக்கு தனியாக கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும். இதை சென்னை உயர்நீதிமன்றம், 2020ல் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. எனவே சட்டம் மற்றும் நிதி அமைச்சகத்துக்கு, முதல்வர் பரிந்துரை செய்து, கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைய ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.