ADDED : ஆக 21, 2026 05:40 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மக்காசோளம்
மானாவாரி, இறவை பயிராக அனைத்து பருவங்களிலும் சாகுபடி செய்ய ஏற்ற
பயிர். அந்தியூர் வட்டாரம் பர்கூர் மலைப்பகுதி, தாளவாடி, சத்தி
வட்டாரம் கடம்பூர் பகுதியில் சாகுபடியாகிறது. குறுகிய காலத்தில்
அதிக லாபம் தரக்கூடியது.
அதிக மகசூல் மற்றும் சாகுபடியை
ஊக்குவிக்க, கிலோ, 100 ரூபாய் மானியத்தில், 'டி.ஹெச்.எம்., --206'
வீரிய ஒட்டு ரக விதை மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இதற்காக, 64 டன்
விதை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள்
சம்மந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
