ADDED : மே 05, 2025 02:23 AM
ஈரோடு: ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில், காய்கறிகள் விலை, நேற்று சற்று உயர்ந்தது. கடந்த வாரம் கிலோ, 80 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ், 140 ரூபாய்க்கு நேற்று விற்றது. இதேபோல், 50 ரூபாய்க்கு விற்ற பீட்ரூட், 80 ஆகவும், 40க்கு விற்ற உருளை, 75 ரூபாயாகவும் உயர்ந்தது.
மார்க்கெட்டில் பிற காய்கறி விலை விபரம் (கிலோ-ரூபாயில்): கத்திரி-50, வெண்டை-30, பீர்க்கன்-60, புடலங்காய்-30, முள்-ளங்கி-30, பாகற்காய்-60, சுரைக்காய்- 20, பட்ட அவரை-70, கருப்பு அவரை - 90, கோவக்காய்-30, முருங்கை-60, பச்சை மிளகாய்-50, கேரட்-75, இஞ்சி- - 50, காலிபிளவர்-40, முட்-டைகோஸ்-25, தக்காளி-15, சின்ன வெங்காயம்-35, பெரிய வெங்காயம்-30.
இன்று மார்க்கெட் லீவ்
இன்று வணிகர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு வ.உ.சி., பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சோதனைச்சாவடி ஊழியர் மாயம்
சத்தியமங்கலம்: வேலுார், குப்பன்பட்டியை சேர்ந்தவர் செல்வம், 30; சத்தியமங்க-லத்தை அடுத்த பண்ணாரி காவல் சுற்றில் வாகன நிறுத்துனராக தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார். கடந்த மாதம், 24ம் தேதி பணிக்கு வரவேண்டியவர் வரவில்லை. எங்கு தேடியும் காணவில்லை. இந்நிலையில் செல்வத்தை கண்டுபி-டித்து தருமாறு, சத்தியமங்கலம் போலீசில் வனக்காப்பாளர் சதீஷ்-குமார் புகாரளித்துள்ளார்.