/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சீரான குடிநீர் வினியோகம் கேட்டு ஈரோட்டில் திடீர் மறியல் முயற்சி
/
சீரான குடிநீர் வினியோகம் கேட்டு ஈரோட்டில் திடீர் மறியல் முயற்சி
சீரான குடிநீர் வினியோகம் கேட்டு ஈரோட்டில் திடீர் மறியல் முயற்சி
சீரான குடிநீர் வினியோகம் கேட்டு ஈரோட்டில் திடீர் மறியல் முயற்சி
ADDED : ஜன 29, 2024 12:38 PM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 38வது வார்டு வண்டியூரான் கோவில் வீதி, ராஜகோபால் தோட்டம் 1, 2, 3 மற்றும் ராஜகோபால் லே அவுட் பகுதிகளில், 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட, 50க்கும் மேற்பட்டோர், ஈரோடு-சேலம்-நாமக்கல் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட வந்தனர். தகவலறிந்து ஈரோடு தாலுகா இன்ஸ்பெக்டர் நவநீதிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சென்று சாலையோரம் தடுத்து நிறுத்தினர்.
அப்போது மக்கள் கூறியதாவது:
சமீப காலமாக நள்ளிரவில் ஊராட்சி கோட்டை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. துவக்கத்தில் தினமும் குடிநீர் வந்தது. பின் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்குவதாக தெரிவித்தனர். தற்போது அரை மணி நேரம் மட்டுமே வருகிறது. எந்த நேரத்தில் வருகிறது என்பது தெரிவதில்லை. இதனால் பெண்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்படுகிறது.
மேலும் இப்பகுதியில் பழைய பிளாஸ்டிக்கை உருக்கி, புதிதாக பிளாஸ்டிக் பொருட்களை செய்யும், ௧௩ நிறுவனங்கள் உள்ளன. இதனால் இப்பகுதியில் காற்றில் மாசு அதிகரித்து, இயற்கையான காற்றை சுவாசிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு கூறினர்.
போலீசாரின் தகவலின்படி சென்ற மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் முருகானந்தம், செந்தாமரை மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேட்டூரிலேயே தண்ணீர் இல்லை. நீர்வரத்து அதிகரித்தால் குடிநீர் சப்ளை செய்வோம். தேவையான அளவு குடிநீரை சப்ளை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.