ADDED : டிச 31, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பகுதியில் வசிக்கும், 50க்கும் மேற்பட்டோர், ஒரு குறிப்பிட்ட இடத்தை, வீட்டு மனை பட்டாக்களாக பிரித்து வழங்க தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்-திருந்தனர்.
சட்டப்படி அந்த இடத்தை வழங்க முடியாது, வேறிடத்தை கூறினால், ஆய்வு செய்து வாய்ப்பிருந்தால் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணியளவில், அலங்கி-யம்-தாராபுரம் சாலையில், 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அலங்கியம் போலீசார் மற்றும் தாராபுரம் வருவாய் துறை-யினர், சமரசம் செய்ததை அடுத்து கலைந்து சென்றனர்.

