ADDED : மே 15, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் :திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்திய நிலையில், மழை பெய்யுமா என, மக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை, 6:00 மணியளவில், திடீரென, இடியுடன் கூடிய மழை பெய்யத் துவங்கியது. அரை மணி நேரம் மழை நீடித்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி
அடைந்தனர்.