/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கால்கள் சிதைந்த இளம்பெண்ணை நடக்க வைத்த சுதா மருத்துவமனை
/
கால்கள் சிதைந்த இளம்பெண்ணை நடக்க வைத்த சுதா மருத்துவமனை
கால்கள் சிதைந்த இளம்பெண்ணை நடக்க வைத்த சுதா மருத்துவமனை
கால்கள் சிதைந்த இளம்பெண்ணை நடக்க வைத்த சுதா மருத்துவமனை
ADDED : நவ 25, 2024 02:27 AM
ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த திருமணமான, 24 வயது பெண், மூன்று மாதத்துக்கு முன், டூவீலரில் அமர்ந்து சென்றபோது விபத்தில் சிக்-கினார். இதில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், இடுப்பு மற்றும் இரு கால்கள் சிதைந்தது. ஈரோட்டில் ஒரு தனியார் மருத்-துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அடுத்து மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனாலும் ரத்தப்போக்கை நிறுத்த முடியாத நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு சுதா மருத்துவமனையில் அனும-திக்கப்பட்டார்.
டாக்டர் ஜனார்த்தனன் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்-தப்போக்கை நிறுத்த சிகிச்சை அளித்தனர். பிறகு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஞானசேகரன் தலைமையிலான குழு-வினர் பல கட்ட சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, 75 நாட்க-ளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் பிசியோதெரபி மருத்-துவர் ஒத்துழைப்போடு இளம்பெண் நடக்க துவங்கினார். உடல் நலனிலும் முன்னேற்றம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக, சுதா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சுதாகர் மகிழ்ச்சி தெரிவித்தார்.