/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீசி எறியப்படும் எச்சங்களுக்கு தீ வைத்து எரிப்பதால் தவிப்பு
/
வீசி எறியப்படும் எச்சங்களுக்கு தீ வைத்து எரிப்பதால் தவிப்பு
வீசி எறியப்படும் எச்சங்களுக்கு தீ வைத்து எரிப்பதால் தவிப்பு
வீசி எறியப்படும் எச்சங்களுக்கு தீ வைத்து எரிப்பதால் தவிப்பு
ADDED : ஏப் 27, 2024 07:05 AM
ஈரோடு : ஈரோடு அருகே கருங்கல்பாளையத்தில், காவிரி கரையோரம் ஆத்மா மின் மயானம் உள்ளது.
இங்கு சடலத்தை தகனம் செய்ய வருவோர், முன்னதாக காலிங்கராயன் கால்வாய் அருகே சடலத்தை வைத்து சடங்கு செய்வது வழக்கம். அப்போது சடலத்துடன் கொண்டு வரப்படும் பழைய பொருள், துணி, மாலை உள்ளிட்ட பொருட்களை கால்வாய் அருகே வீசி செல்கின்றனர். இவற்றை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், குப்பை கிடங்குக்கு எடுத்து செல்வது வழக்கம்.இந்நிலையில் சில நாட்களாக கால்வாய் அருகே போடப்படும் பழைய பொருட்களை, மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி புகை மண்டலமாகி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். காலிங்கராயன் கால்வாய் அருகே பழைய பொருட்களை தீ வைத்து எரிப்பதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.