/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தவணை முறையில் நடக்கும் தார்ச்சாலை பணியால் அவதி
/
தவணை முறையில் நடக்கும் தார்ச்சாலை பணியால் அவதி
ADDED : மே 10, 2024 07:03 AM
புளியம்பட்டி : புன்செய்புளியம்பட்டியை அடுத்த நல்லுார் பஞ்.,ல் நேருநகர், வடக்கு காந்திபுரம் பகுதியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் இருந்து நேரு நகர் வழியாக பவானிசாகர் சாலைக்கு செல்லும் தார்ச்சாலை சேதமடைந்தது. இதனால் கிராம சாலைகள் திட்டத்தில், 10 மாதங்களுக்கு முன் சாலை அமைக்க பூஜை போடப்பட்டது. சில மாதங்களுக்கு முன் பழைய சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டினர்.அடுத்தக்கட்ட பணி கிடப்பில் போடப்பட்ட நிலையில், லோக்சபா தேர்தலை ஒட்டி, ஏப்ரல் மாதம் ஜல்லி கொட்டினர். மேற்கொண்டு பணி நடக்கவில்லை. தற்போது சாலையில் ஜல்லிக்கற்கள் பரவி, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சாலை அமைக்கும் பணியை உடனே தொடங்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: சாலை அமைக்கும் பணியை, நேரம் கிடைக்கும் போது தவணை முறையில் செய்கின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இவ்வாறு கூறினர்.