/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கருங்கல்பாளையத்தில் புழுதி சாலையால் அவதி
/
கருங்கல்பாளையத்தில் புழுதி சாலையால் அவதி
ADDED : ஜூலை 12, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு :ஈரோடு, கருங்கல்பாளையம் சின்னப்பா லே-அவுட், முதலாவது வீதி அருகே பிரதான சாலையில் தார்ச்சாலை சேதமாகி விட்டது. இதனால் ஜல்லி, மணல் கொட்டி சமப்படுத்தினர். அதன் பிறகு பணி நடக்கவில்லை. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் பள்ளிபாளையம் வழியாக செல்லும் பஸ்கள், பிற வாகனங்கள் கருங்கல்பாளையம் பிரதான சாலை வழியாக செல்கின்றன.
வாகனங்கள் தொடர்ந்து பயணிப்பதால் எந்நேரமும் புழுதி பறக்கிறது. இதனால் அப்பகுதி வீடு, கடைக்காரர்கள், டூவீலரில் செல்வோர் கடுமையாக பாதிக்கின்றனர். இப்பகுதி மக்களின் பாதிப்பை உணர்ந்து, விரைவாக அடுத்தகட்ட பணியை தொடங்க வேண்டும்.