/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழை அழுகும் நிலையில் கரும்பு பயிர்கள்
/
தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழை அழுகும் நிலையில் கரும்பு பயிர்கள்
தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழை அழுகும் நிலையில் கரும்பு பயிர்கள்
தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழை அழுகும் நிலையில் கரும்பு பயிர்கள்
ADDED : அக் 20, 2024 01:42 AM
தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழை
அழுகும் நிலையில் கரும்பு பயிர்கள்
தர்மபுரி, அக். 20-
தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், விவசாயிகள் சாகுபடி செய்த கரும்பு பயிர்கள் மழை நீரில் அழுகும் நிலை உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், விவசாயிகள் காய்கறி, பழங்கள் மற்றும் கீரை வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இதுதவிர மாவட்டம் முழுவதும் இந்தாண்டு, 6,000 முதல், 7,000 ஹெக்டேர் வரை கரும்பு பயிர் சாகுபடி செய்துள்ளனர். தர்மபுரி, பாலக்கோடு, அரூர், மொரப்பூர் பகுதிகளில் கரும்பு சாகுபடி பரப்பளவு அதிகம். இவற்றை, தர்மபுரி முத்துகவுண்டன் கொட்டாய், கடகத்துார் பகுதியில் உள்ள வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு, உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரையாக மாற்றி விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, தொடர் மழை பெய்து வருவதால் கரும்பு பயிர்களில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கரும்பு உற்பத்தி பாதிக்கும் நிலையில், பொங்கல் பண்டிகை சீசனுக்கு வெல்லம், சர்க்கரை விலை உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.