ADDED : செப் 22, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை சங்கத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டம், செயலாளர் முத்துசாமி தலைமையில் நேற்று நடந்தது.
மாநில பொது செயலாளர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் முனுசாமி கோரிக்கைகள் குறித்து பேசினர். கரும்பு டன்னுக்கு, 5,500 ரூபாய் கேட்டு, அக்.,15ம் தேதி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும். 2004 முதல் 2009 வரையிலான அரவை பருவத்துக்கு லாபத்தில் பங்கு தொகை தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன