ADDED : ஆக 15, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
திண்டல் புது காலனியை சேர்ந்தவர் மூர்த்தி, 38; இவரின் மனைவி வினோதா.
பல்வேறு தொழில்கள் செய்து வந்த மூர்த்திக்கு சில மாதங்களுக்கு நஷ்டம்
ஏற்பட்டது.
அதேநேரம் குடிப்பழக்கமும் இருந்ததால் மனைவியுடன்
கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்து தனியாக
வசித்தார். நேற்று முன்தினம் வீட்டில் மின்விசிறியில் துாக்கிட்டு
தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
