sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பச்சைமலை, சென்னிமலையில் சூரசம்ஹாரம் ஜோர்: திண்டல் மலையில் தத்ரூபமாக நடந்த வதம்

/

பச்சைமலை, சென்னிமலையில் சூரசம்ஹாரம் ஜோர்: திண்டல் மலையில் தத்ரூபமாக நடந்த வதம்

பச்சைமலை, சென்னிமலையில் சூரசம்ஹாரம் ஜோர்: திண்டல் மலையில் தத்ரூபமாக நடந்த வதம்

பச்சைமலை, சென்னிமலையில் சூரசம்ஹாரம் ஜோர்: திண்டல் மலையில் தத்ரூபமாக நடந்த வதம்


UPDATED : நவ 08, 2024 07:17 PM

ADDED : நவ 08, 2024 01:14 AM

Google News

UPDATED : நவ 08, 2024 07:17 PM ADDED : நவ 08, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், சூரசம்ஹார விழா கோலாகலமாக நேற்று நடந்தது.

கோபி, பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, கடந்த, 2ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா நேற்று காலை தொடங்கியது. காலை, 9:00 மணிக்கு, சக்திவேல் வாங்குதல் நடந்தது.

அதன்பின் சூரனை வதம் செய்ய, முருக பெருமான் மற்றும் வீரபாகு, மலைக்கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இதனால் பச்சைமலை முருகன் கோவில் அடிவாரம் முதல், பிரதான சாலை முழுக்க பக்தர்கள் குவிந்தனர்.

பச்சைமலை ரோடு, மேட்டுவலவு, புதுப்பாளையம் ஆகிய இடங்களில், சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. அதையடுத்து பன்னீர் அபிேஷகம் மற்றும் சண்முகர் அர்ச்சனை நடந்தது. இதேபோல் பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், சண்முகருக்கு அபிஷேகம், பச்சை சாத்தி அலங்காரம், சண்முகர் அர்ச்சனை, சக்திவேல் வாங்குதல் நடந்தது.

இதை தொடர்ந்து கிரிவீதியில் சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரு நிகழ்வுகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திண்டலில்...

ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோவில் சூரமசம்ஹார நிகழ்வு, மலை அடிவாரத்தில் மாலை, 6:30 மணிக்கு தொடங்கியது. முருகன் மற்றும் அவரது போர்படை தளபதி வீரபாகு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட சப்பரத்தில், மலைக்கோவிலில் இருந்து அடிவாரத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு சூரனை வதம் செய்யும் போர் தொடங்கியது.

கோவில் கிரிவலப் பாதையில் முருகன் நரகாசூரனையும், சிங்கமுகா சூரனையும் வதம் செய்தார். கோவில் முன் சூரபத்ம வதம் தத்ரூபமாக நடந்தது. சூரனை முருகன் வதம் செய்ததும், வாணவெடிகள் வெடிக்க, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா' என கோஷமிட்டபடி முருகனை தரிசனம் செய்தனர். இன்று காலை, 9:௦௦ மணிக்கு வேலாயுதசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம், தொடர்ந்து திருக்கல்யாண விருந்து நடக்கிறது.

புளியம்பட்டியில்...

புன்செய்புளியம்பட்டியில் காமாட்சியம்மன் கோவில் முத்துக்குமரன் சன்னதி உள்ளது. இங்கு சூரசம்ஹார விழா நேற்று மாலை துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில், சுவாமி ஊர்வலம், நகரின் முக்கிய வீதி வழியாக சென்றது. இதில் சூரபத்மனின் மூன்று அவதாரங்களையும், முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

இதை தொடர்ந்து காமாட்சியம்மன் கோவில் மைதானத்தில், தனது சுயரூபத்துடன் போர் புரிய வந்த சூரபத்மனை முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். இறுதியில் மாமரமாக உருவெடுத்த சூரபத்மனை, சேவலாக, மயிலாக உருமாற செய்தார். விழாவை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதேபோல் புன்செய்புளியம்பட்டி சுப்ரமணியர் கோவிலில் சூரசம்ஹார விழா வழக்காமன உற்சாகத்துடன் நடந்தது.

* சத்தியமங்கலம் அருகேயுள்ள தவளகிரி தண்டாயுதபாணி கோவிலில், நேற்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சென்னிமலையில்...

சென்னிமலை மலை மீது அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலின் கந்தசஷ்டி விழா, சூரசம்ஹார நிகழ்வு, மலை அடிவாரத்தில் நேற்றிரவு வெகு விமரிசையாக, கோலாகலமாக நடந்தது. முன்னதாக நேற்று மதியம், சூரனை வதம் செய்வதற்காக சக்திவேல் வாங்கும் வைபோகம் மலைக்கோவிலில்

நடந்தது.

தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்து சக்திவேலை முருகப்பெருமானிடம் ஒப்படைத்தார். அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு தொடங்கி படி வழியாக, மலை அடிவாரத்துக்கு சென்றார். இரவு, 9:00 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை, மேளதாளத்துடன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம்

தொடங்கியது.

நகரின் நான்கு ராஜவீதிகளில் நடந்த நிகழ்வை ஆயிரக்காணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். நான்கு வீதிகளிலும் நிகழ்வு முடிந்தவுடன் கைலாசநாதர் கோவிலுக்கு சுவாமி கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று காலை, 10:00 திருக்கல்யாண உற்சவம்

நடக்கிறது.






      Dinamalar
      Follow us