/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழந்தை தொழிலாளர் குறித்து 315 நிறுவனங்களில் ஆய்வு
/
குழந்தை தொழிலாளர் குறித்து 315 நிறுவனங்களில் ஆய்வு
குழந்தை தொழிலாளர் குறித்து 315 நிறுவனங்களில் ஆய்வு
குழந்தை தொழிலாளர் குறித்து 315 நிறுவனங்களில் ஆய்வு
ADDED : ஜூலை 05, 2024 12:44 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அம-லாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் கடந்த மாதம் மாவட்ட அளவில் ஆய்வு நடந்தது.
டெக்ஸ்டைல், கார்மென்ட்ஸ், நோட்டு - புத்தகம், வெளிநாட்டு சிகரெட் விற்பனை செய்யும் கடைகள், நிறுவனங்கள், இதர கடைகள் என, 86 இடங்களில் ஆய்வு செய்து, 34 கடைகளில் முரண்பாடு காணப்பட்டது. சட்டமுறை எடையளவு குறைபா-டுகள் குறித்து, 100 கடை, நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், நான்கு கடைகளில் முரண்பாடு தெரிந்தது. குழந்தை தொழிலாளர், கொத்தடிமை தொழிலாளர் ஒழித்தல் சட்-டத்தின் படி, பேக்கரி, உணவு நிறுவனங்கள், விற்பனை செய்யும் கடைகள், இதர நிறுவனம் என, 315 இடங்களில் ஆய்வு செய்யப்-பட்டதில், எவரும் கண்டறியப்படவில்லை. இத்தகவலை ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் திருஞானசம்பந்தம் தெரிவித்தார்.