/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
1.35 டன் ரேஷன் அரிசி கடத்திய ஆசாமி கைது
/
1.35 டன் ரேஷன் அரிசி கடத்திய ஆசாமி கைது
ADDED : மே 10, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,
பவானியில், ௧.௩௫ டன் ரேஷன் அரிசி கடத்திய ஆசாமி சிக்கினார்.
ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுதா தலைமையிலான போலீசார், பவானி அருகே லட்சுமி நகரில், வாகன தணிக்கை செய்தனர்.
ஒரு ஆம்னி வேனில் தலா, 50 கிலோ எடையில், 27 மூட்டைகளில், 1,350 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. வேன் டிரைவரான பவானி, குருப்பநாயக்கன்பாளையம் அப்புசாமியை, 49, கைது செய்தனர்.
மக்களிடம் ரேஷன் அரிசி வாங்கி, வடமாநில தொழிலாளர், கால்நடை தீவன கலப்பு போன்றவைகளுக்காக விற்பனை செய்ய கடத்தி சென்றதை ஒப்பு கொண்டார். வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.