/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
த.வெ.க.,வால் தி.மு.க.,வுக்கே பாதிப்பு: எச்.ராஜா கணிப்பு
/
த.வெ.க.,வால் தி.மு.க.,வுக்கே பாதிப்பு: எச்.ராஜா கணிப்பு
த.வெ.க.,வால் தி.மு.க.,வுக்கே பாதிப்பு: எச்.ராஜா கணிப்பு
த.வெ.க.,வால் தி.மு.க.,வுக்கே பாதிப்பு: எச்.ராஜா கணிப்பு
ADDED : அக் 28, 2024 03:50 AM
ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், மாவட்ட அள-விலான தேர்தல் பயிலரங்கம் நேற்று நடந்தது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, மாநில பொது செயலாளர் முருகா-னந்தம் பங்கேற்றனர். எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தி.மு.க., ரியல் எஸ்டேட் மாபியா கும்பலாக மாறி விட்டது. ஊழலில் ஒட்டு மொத்த உருவாக விளங்குகிறது. மோடி அரசு விவசாயிகளுக்கு, 70 வயதுக்கு மேற்பட்டவர்க-ளுக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை செயல் படுத்துகிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தால் தி.மு.க.,வுக்-குத்தான் பாதிப்பு ஏற்படும். பா.ஜ.,வுக்கு அல்ல. தி.மு.க., அய-லக அணி என்பது போதை பொருட்கள் கடத்துவதற்கு தான் பொறுப்பு கொடுக்கப்படுகிறது.
இரு மொழி கொள்கையில் ஸ்டாலின் தீவிரமாக உள்ளாரா? ஸ்டாலின் மகள் பள்ளியில் சமச்சீர் கல்வி போர்டு வைக்க வேண்டும். இல்லையெனில் பள்ளி முன் போராட்டம் நடத்-துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்